ஹேசில்வுட் 
செய்திகள்

காயத்திலிருந்து மீண்டார் ஹேசில்வுட்: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பார்!

காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DIN

காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனிலுள்ள தி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகின்றது.

இந்தப் போட்டியில் டெஸ்ட் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹேஷில்வுட் காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகி இம்மாத தொடக்கத்தில் நாடு திரும்பினார்.

இந்நிலையில், அவரது காயம் குறித்து தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர்,

ஹேசில்வுட்டுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஆஷில் போட்டிகளில் விளையாட முழு வீச்சில் தயாராகி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT