சென்னை மெட்ரோ 
செய்திகள்

பிளே ஆஃப்: மெட்ரோவில் வந்தால் டிக்கெட் எடுக்க வேண்டும்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளை காண மெட்ரோவில் வரும் பயணிகள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளை காண மெட்ரோவில் வரும் பயணிகள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஐபிஎல் டிக்கெட்டில் உள்ள கியூஆர் கோட்டை பயன்படுத்தி மெட்ரோவில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பயணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

லீக் போட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து மெட்ரோ நிர்வாகம் வழங்கியதால் இந்த சலுகை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மே 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பிளே ஆஃப் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துவதால், இப்போட்டிகளை காண மெட்ரோவில் வரும் பயணிகள் அவசியம் பயணச்சீட்டை எடுக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இரவு 11 மணிக்கு மேல் டிக்கெட் கவுண்டர்கள் செயல்படாது என்பதால், மெட்ரோ வாட்ஸ்அப் எண் அல்லது மெட்ரோ செயலியில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை சென்னை - குஜராத் அணிகள் முதல் பிளே ஆஃப் சுற்றிலும், நாளை மறுநாள் மும்பை - லக்னெள அணிகள் எலிமினேட்டர் சுற்றிலும் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT