FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வரலாற்றை மாற்றுமா சென்னை, மும்பை அணிகள்?

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத், லக்னெள அணிகளை சென்னை, மும்பை அணிகள் வென்று வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Updated On : 22 மே 2023, 5:50 pm IST
பகிர்:

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத், லக்னெள அணிகளை சென்னை, மும்பை அணிகள் வென்று வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் கடைசி சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் புதிதாக அறிமுகமானது. குஜராத் அணி கலந்து கொண்ட முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

இந்நிலையில், 4 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை அணியை கடந்த சீசனில் இரண்டு முறையும், நடப்பு சீசனில் ஒரு முறையும் எதிர்கொண்ட குஜராத் அணி 3 முறையும் வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

அதேபோல், 5 முறை சாம்பியனான மும்பை அணியை இதுவரை 3 முறை எதிர்கொண்டுள்ள லக்னெள அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த சீசனில் குஜராத், சென்னை, லக்னெள, மும்பை அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சென்னையில் நடைபெறும் பிளே ஆஃப் முதல் சுற்றில் நாளை குஜராத் அணியை சென்னையும், எலிமினேட்டர் சுற்றில் நாளை மறுநாள் லக்னெள அணியை மும்பையும் எதிர்கொள்கின்றன.

இந்த போட்டியில் சென்னை, மும்பை அணிகள் வெற்றி பெற்று ஐபிஎல்லில் புதிய வரலாறு படைக்கும் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments