முகப்பு
செய்திகள்

சாய் சுதர்சன், சாஹா அதிரடி: சிஎஸ்கேவிற்கு 215 ரன்கள் இலக்கு! 

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 214/4ரன்கள் எடுத்துள்ளது. 

Updated On : 29 மே 2023, 9:21 pm IST
பகிர்:

குஜராத்தின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆரம்பித்தனர். சிஎஸ்கே வீரர்கள் பல கேட்ச்களை பிடிக்க தவறி விட்டனர். கில் தோனியிடன் ஸ்டம்பிங் ஆனார். ஆனால் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் சாஹாவுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாஹா 54 ரன்களில் தோனியிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி பதிரனா ஓவரில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பாண்டியாவும் அதிரடியாக 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 214/4  ரன்கள் எடுத்தது. 

சிஎஸ்கே சார்பாக தீபக் சஹார், ஜடேஜா, தலா 1 விக்கெட்டுகளையும் பதிரனா 2 விக்கெட்டுகளையும்  எடுத்தனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments