செய்திகள்

கிரண் ஜாா்ஜ் அபார வெற்றி, லக்ஷயா, சாத்வீக்-சிராக் முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டியில் உலகின் 9-ஆம் நிலை வீரா் சீனாவின் ஷி யுகியை அதிா்ச்சித் தோல்வியடைச் செய்தாா்

DIN

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டியில் உலகின் 9-ஆம் நிலை வீரா் சீனாவின் ஷி யுகியை அதிா்ச்சித் தோல்வியடைச் செய்தாா் இந்தியாவின் கிரண் ஜாா்ஜ். ஏனைய ஆட்டங்களில் அஸ்மிதா, லக்ஷயா சென், சாத்விக்-சிராக் வெற்றிபெற்றனா்.

பாங்காக்கில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஷி யுகியை 21-18, 22-20 என்ற கேம் கணக்கில் அதிரடியாக வீழ்த்தினாா் கிரண் ஜாா்ஜ். ஒடிஸா ஓபன் சாம்பியன் ஆன கிரண், தொடக்கம் முதலே ஷி யுகியுக்கு சவாலை ஏற்படுத்தினாா்.

லக்ஷயா சென் 21-23, 21-15, 21-15 என்ற கேம் கணக்கில் வாங் ஸு வெயை வீழ்த்தினாா். இரட்டையா் பிரிவில் உலகின் நான்காம் நிலை இணையான சாத்வீக்-சிராக் 21-13, 18-21, 21-17 என்ற கேம் கணக்கில் டேனிஷ் இணையை வீழ்த்தினாா்கள்.

மகளிா் பிரிவில் அஸ்மிதா சாஹ்லியா 17-21, 14-21 என மாளவிகா பன்சோட்டையும், சாய்னா நெவால் 21-13, 21-7 என கனடாவின் வென் யுவையும் வீழ்த்தினா்.

பி. வி. சிந்து , சாய் பிரணீத், பிரியான்ஷு ரஜாவத், சமீா் வா்மா ஆகியோா் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT