செய்திகள்

இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது மிகவும் கடினம்: ஸ்டீவ் ஸ்மித்

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

DIN

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் நாளை (நவம்பர் 7) மும்பை  வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. நடப்பு உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்த இரு அணிகளுக்கும்  நாளை நடைபெறும் போட்டி மிகவும் முக்கியமானதாகும். நாளையப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  வெற்றி பெறும்பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் இருக்கும். ஆனால், அரையிறுதிக்குத் தகுதி பெற அந்தந்த அணிகள் கண்டிப்பாக தங்களது கடின உழைப்பை கொடுக்க வேண்டும். நாங்கள் அரையிறுதியில் இடம்பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். நடப்பு உலகக் கோப்பையின் தொடக்கத்தில் சில தோல்விகளைத் தழுவினாலும், பின்னர் வெற்றிப் பாதைக்குத் திரும்பினோம்.

நாளை எங்களுக்கு மிகப் பெரிய போட்டி உள்ளது. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என நினைக்கிறேன். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். அவர்களை வெல்வது மிகவும் கடினம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT