மும்பை: உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.