செய்திகள்

இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நீட்டிப்பு!

DIN


இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெளியேறிய பிறகு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அதன்பின், அவரது பயிற்சியின்கீழ் இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

இதற்கிடையே, உலகக் கோப்பை ஒருநாள் தொடருடன் இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளருக்கான இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய கிரிக்கெட் அகாதெமியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மனும் தொடர்வார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியுடன் ராகுல் டிராவிட்டும் பயணிக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

கன்னக்குழி அழகே..!

SCROLL FOR NEXT