பென் ஸ்டோக்ஸ் 
செய்திகள்

பென் ஸ்டோக்ஸுக்கு அறுவை சிகிச்சை!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

DIN

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற பென் ஸ்டோக்ஸ் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், உடற்தகுதி காரணமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.

தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் கடைசி மூன்று போட்டிகளில் பந்துவீச முடியவில்லை.

இதையடுத்து, இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பேட்டராக மட்டுமே களமிறங்கினார். ஒரு போட்டியில்கூட ஆல்ரவுண்டராக பந்துவீசவில்லை.

இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முழு உடற்தகுதியுடன் களமிறங்கும் நோக்கில் இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டோக்ஸ், குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உலகக் கோப்பை மற்றும் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக அடுத்த ஐபிஎல் சீசனில் இருந்து ஸ்டோக்ஸ் விலகியுள்ளதாக சென்னை அணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சீராக உள்ளதாக மும்பை விமான நிலையம் பதிவு!

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! - கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்

உலக சினிமா

ஆபரேஷன் சிந்தூர்

தென்னாப்பிரிக்கக் காடுகளில்...

SCROLL FOR NEXT