ஆசிய விளையாட்டு ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப். 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
11 ஆவது நாளான இன்று, மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் கலந்துகொண்டார்.
அவர், 2:03.75 நிமிடங்களில் இலக்கை அடைந்தார். இதனால் அவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதேபோல இலங்கையின் திஸ்ஸநாயக முடியான்செலகே தருஷி 2:03.20 நிமிடங்களில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார். சீன வீராங்கனை வெண்கலம் வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.