செய்திகள்

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பாரா கில்? 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பாரா கில் என்ற கேள்வ

DIN


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பாரா கில் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட 50 ஓவா்கள் ஒருநாள் உலகக் கோப்பை முதல் ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது நியூஸிலாந்து.

உலகக் கோப்பை தொடர் தொடங்கியுள்ள நிலையில், சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்டரான சுப்மன் கில்லுக்கு டெய்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை(அக்.8) சென்னை சேப்பக்கத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா. இதில் கில் பங்கேற்பதற்கு முன்பு வெள்ளிக்கிழமை அவருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

காய்ச்சல் தொடர்ந்தால், அவருக்கு பதில் இஷான் கிஷன் அல்லது கே.எல். ராகுல் தொடக்க வீரராக இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT