செய்திகள்

உலகக் கோப்பை: நெதர்லாந்துக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலகக் கோப்பைத் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் சமான் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். ஃபகர் சமான் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 5  ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இமாம் உல் ஹக் 15 ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து, முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சௌத் ஷகீல் 68 ரன்கள் (9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), முகமது ரிஸ்வான் 68 ரன்கள் (8 பவுண்டரிகள்)  எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் இப்திகார் அகமது (9 ரன்கள்), ஷதாப் கான் (32 ரன்கள்), முகமது நவாஸ் (39 ரன்கள்)  எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களின் முடிவில் 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

நெதர்லாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாஸ்-டி-லீட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். காலின் அக்கர்மேன் 2 விக்கெட்டுகளையும், ஆர்யன் தத், லோகன் வான் பீக், , பால் வான் மீகேரன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT