செய்திகள்

வங்கதேச அணியின் சுழலில் 156 ரன்களுக்கு வீழ்ந்த ஆப்கானிஸ்தான்!

உலகக் கோப்பையின் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. 

DIN

உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி. 2வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி. இந்நிலையில் உலகக் கோப்பையின் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. 

வங்கதேச அணியின் சுழலில் ஆப்கானிஸ்தான் 37.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு சுருண்டது. ஷகிப், மெஹதி ஹாசன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். 

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஜ்-48, இப்ரஹிம் ஜார்டன் - 22,அஜமதுல்லா- 22 ,ஷாகித் -18 ரன்கள் எடுத்தார்கள். ரஷித் கான் 8 ரன்களும் நபி 6 ரன்களும் நஜிபுல்லா 5 ரன்களும் எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்கள். 

157 ரன்கள் இலக்காக கொண்டு வங்கதேச அணி விளையாடி வருகிறது.  9 ஓவர் முடிவில் 39/2 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT