செய்திகள்

ஷேன் வார்னேவின் சாதனையை நெருங்கும் ஆடம் ஸாம்பா!

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை ஆடம் ஸாம்பா நெருங்கி வருகிறார். 

DIN

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை ஆடம் ஸாம்பா நெருங்கி வருகிறார். 

உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள்  விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 209  ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் 10-வது முறையாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை ஆடம் ஸாம்பா நெருங்கி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 4 விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஷேன் வார்னே தன்வசம் வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஷேன் வார்னே இதுவரை 13 முறை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT