செய்திகள்

ஆசிய பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்; தமிழக மாரியப்பன் வெள்ளி!

ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 4 பதக்கங்களை வென்றுள்ளது.

DIN

ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 4 பதக்கங்களை வென்றுள்ளது.

சீனாவில் ஞாயிற்றுக்கிழமை ஆசிய பாரா போட்டிகள் தொடங்கியது. இதில், இந்தியாவிலிருந்து 303 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் 28-ஆம் தேதி வரை 17 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்த போட்டியின் முதல் நாளான இன்று இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கங்களை வென்றுள்ளது.

ஆடவர் உயரம் தாண்டுதலில் கைலேஷ் குமார் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதே பிரிவில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம்சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.

அதேபோல், மகளிர் படகு போட்டியில் பிரச்சி யாதவ் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆரராக சம்மன்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

SCROLL FOR NEXT