செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வானிலை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை அடுத்த நாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 

DIN

சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வானிலை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை அடுத்த நாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 

ஆசியக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் (செப்டம்பர் 10) இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெறும் இந்தப் போட்டி மழையினால் பாதிக்கப்பட  வாய்ப்புள்ளதாக தெரிகிறது. லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழை காரணத்தால் முடிவு கிடைக்காமல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. அதே மாதிரியான சூழல் தற்போது இரு அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்றிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வானிலை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை அடுத்த நாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பான அறிக்கையில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருப்பதாவது: நாளை மறுநாள் (செப்டம்பர் 10) இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நிறுத்தப்பட்டால், நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து அடுத்த நாள் (செப்டம்பர் 11) போட்டி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் நடைபெறும் மற்ற சூப்பர் 4 போட்டிகள் எதற்கும் கூடுதல் நாள் என்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT