செய்திகள்

உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன்: 15 வீரர்கள் அடங்கிய பட்டியல் அறிவிப்பு

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 போ் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 போ் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), பிசிசிஐ இணைந்து 50 ஓவா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் வரும் அக். 5 முதல் நவ. 19-ஆம் தேதி வரை நடத்துகின்றன. அக். 5-ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூஸிலாந்து மோதுகின்றன. 

10 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அரையிறுதி ஆட்டங்கள் நவ. 15-இல் மும்பையிலும், 16-இல் கொல்கத்தாவிலும், இறுதி ஆட்டம் நவ. 19-இல் அகமதாபாதிலும் நடைபெறுகிறது. 

உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் 15 போ் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயத்திலிருந்து குணமடைந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். 

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், மார்க் சேப்மன், கான்வே, லாகி ஃபெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி, வில் யங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT