செய்திகள்

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் காயம்: உலகக் கோப்பையில் கலந்து கொள்வாரா?

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

DIN

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் இளம் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான நசீம் ஷாவுக்கு இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டது. அவரது வலது தோளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5  முதல் தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொழும்பு மற்றும் துபையில் நசீம் ஷாவுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன்களில் அவருக்கு வலது தோளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அவரை சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு அனுப்பியுள்ளது. 

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழு நசீம் ஷாவின் காயத்தின் நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. மருத்துவக் குழு நிபுணர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு சிறப்பான சிகிச்சையை அவருக்கு அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு அவர் பாகிஸ்தான் அணிக்கு திரும்புவது குறித்து தெரிவிக்கப்படும்  எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... 'சுதேசி' மோடி Vs 'வரி' டிரம்ப்... வெல்லப் போவது யார்?

வடசென்னை உலகில்.. சிம்பு! எஸ்டிஆர்-49 முன்னோட்ட விடியோ!

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நவ. 30-க்குள் அமல்படுத்த உத்தரவு!

ஆகஸ்ட் நினைவுகள்... ஹன்சிகா!

SCROLL FOR NEXT