செய்திகள்

பார்வையாளர்களே இல்லாத பாகிஸ்தான்-நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளின் பயிற்சி ஆட்டம் பார்வையாளர்களே இல்லாமல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8-ஆவது முறையாக சாம்பியனாகி இருக்கிறது  இந்தியா. சொந்த மண்ணில் இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலகட்டத்தில் உலகக் கோப்பை போட்டியில் களம் காண இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு இந்த சாம்பியன் கோப்பை உத்வேகம் அளிக்கும் என்பது முக்கியமானது.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் அணிகள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி செப்.29ஆம் நாள் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் ஹைதராபாத்தில் விளையாட இருக்கிறது. 

அன்றைய தினத்தில் உள்ளூரில் திருவிழா நடைபெற இருப்பதால் இந்தப் பயிற்சி ஆட்டத்திற்கு பாதுகாப்பு குறைவு ஏற்படுமென பார்வையாளர்களே இல்லாமல் போட்டி நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டம் இங்கிலாந்துடன் செப்.30ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT