நேபாள வீரர் தீபேந்திர சிங்(படம்:ட்விட்டர்) 
செய்திகள்

9 பந்தில் அரைசதம்: யுவராஜ் சாதனையை முறியடித்த நேபாள வீரர்!

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் அதிவேக அரைசதம் அடித்து நேபாள வீரர் தீபேந்திர சிங் சாதனை படைத்துள்ளார்.

DIN

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் அதிவேக அரைசதம் அடித்து நேபாள வீரர் தீபேந்திர சிங் சாதனை படைத்துள்ளார்.

ஆண்கள் கிரிக்கெட் குரூப் சுற்றில் மங்கோலியா அணியும், நேபாள அணியும் மோதின. டாஸ் வென்ற மங்கோலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 3 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மங்கோலியா 41 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடித்த நேபாள அணியின்  தீபேந்திர சிங், அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை பெற்றார்.

அவர் பேட்டிங் செய்த முதல் 9 பந்துகளில் 6, 6, 6, 6, 6, 6, 2, 6, 6 ரன்கள் ஸ்கோர் செய்தார்.

இதன்மூலம் சர்வதேச போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் விளாசிய இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை தீபேந்திர சிங் முறியடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

SCROLL FOR NEXT