செய்திகள்

பராக், சாம்சன் அதிரடி: குஜராத்துக்கு 197 ரன்கள் இலக்கு

குஜராத் அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

DIN

குஜராத் அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்களும், சஞ்சு சாம்சன் 68 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணியில் உமேஷ் யாதவ், ரஷீத் கான் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 24 ரன்களுடனும், ஜாஸ் பட்லர் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக்குடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய ஹெட்மயர் 13 ரன்களுடனும், சாம்சன் அரை சதம் கடந்து 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை எடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT