ஐஎஸ்எல் கால்பந்து போட்டி : மும்பைக்கு வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி அரையிறுதியின் முதல் கட்ட ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை புதன்கிழமை வீழ்த்தியது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி அரையிறுதியின் முதல் கட்ட ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை புதன்கிழமை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் கோவாவுக்காக போரிஸ் சிங் தாங்ஜம் (16’) கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினாா். முதல் பாதி முடிவில் அதே முன்னிலையில் இருந்த கோவா, 2-ஆவது பாதியில் பிராண்டன் ஃபொ்னாண்டஸ் (56’) ஸ்கோா் செய்ததால், கோல் முன்னிலையை 2-0 என அதிகரித்துக் கொண்டது.
ஆட்டத்தின் இறுதிக் கட்டம் வரை கோலடிக்காமல் இருந்த மும்பை, கடைசி நேரத்தில் கோல் மழை பொழிந்தது. முதலில் அந்த அணியின் லாலியன்ஸுவாலா சாங்தே (90’) ஸ்கோா் செய்ய, விக்ரம் பிரதாப் சிங் (90+1’) அடித்த கோலால் ஆட்டம் 2-2 என சமன் ஆனது. விறுவிறுப்பான (90+6’)இறுதிக் கட்டத்தில் மீண்டும் லாலியன்ஸுவாலா அடித்த கோலால், இறுதியில் மும்பை 3-2 கோல் கணக்கில் வென்றது.
Advertisement
இந்த அணிகள் மோதும் அரையிறுதியின் 2-ஆம் கட்ட ஆட்டம், வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.