படம் | AP
செய்திகள்

கடைசி ஒருநாள் போட்டி இந்திய அணிக்கான மிகப் பெரிய வாய்ப்பு; வாஷிங்டன் சுந்தர் கூறுவதென்ன?

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 7) நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரை சமன்செய்ய கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி, சுழற்பந்துவீச்சு சவாலை சமாளித்து சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்திய அணியை தயார் நிலையில் வைத்திருக்க கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி, கடினமான சூழல்களில் சிறப்பாக செயல்பட இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. மிகப் பெரிய தொடர்கள் வரவிருக்கின்றன. அந்த தொடர்களிலும் இதுபோன்ற கடினமான சூழல்கள் இருக்கும். எதிர்வரும் மிகப் பெரிய தொடர்களில் கடினமான சூழல்களில் சுழற்பந்துவீச்சு மேலும் சவாலனதாக இருக்கும். இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி சந்தித்த சவாலான சூழலை பாடமாக எடுத்துக் கொண்டு, நாளை நடைபெறவுள்ள போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும்.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதுபோன்ற ஆடுகளங்களில் நாங்கள் ஏற்கனவே விளையாடியுள்ளோம். உள்ளூர் போட்டிகளிலும் இதுபோன்ற சவாலான ஆடுகளங்களில் நன்றாக விளையாடியுள்ளோம். ஆடுகளம் சவாலனதாக இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த சவாலை இந்திய அணி வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT