பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வினேஷ் போகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று(ஆக. 10) விசாரிக்கப்பட்டு இன்றிரவுக்குள் தீர்ப்பு வழங்கப்படுமென சர்வதேச விளையாட்டு நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.