அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இந்திய வீரர் சுமித் நாகல் வெளியேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று (ஆக. 27) நடைபெற்ற போட்டியில், 1-6, 3-6, 6-7 (6) என்ற புள்ளிக்கணக்கில் நெதர்லாந்து வீரர் டேலோன் கிரேய்க்ஸ்போரிடம் அவர் தோல்வியடைந்துள்ளார்.
உலக டென்னிஸ் தரவரிசையில் 73-ஆம் நிலை வீரரான சுமித் நாகல் அடுத்ததாக, ஆக. 29-ஆம் தேதி நடைபெறும் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவுடன் இணைந்து களம் காணுகிறார்.