பாரீஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள அவனி லெகரா மற்றும் மோனா அகர்வாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரீஸ் பாராலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
பாரீஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கான பதக்க கணக்கைத் தொடங்கி வைத்துள்ள அவனி லெகரா மற்றும் மோனா அகர்வாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது: பாரீஸ் பாராலிம்பிக்கில் இந்தியா தனது பதக்க கணக்கைத் தொடங்கியுள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள அவனி லெகராவுக்கு எனது வாழ்த்துகள். பாராலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்ற முதல் பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு இந்தியாவை பெருமையடையச் செய்கிறது.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மோனா அகர்வாலுக்கு எனது வாழ்த்துகள். அவரது சாதனைகள் அவர் எந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு செயல்படுகிறார் என்பதை பிரதிபலிக்கிறது. உங்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது மோனா எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.