கார்ல்சென் படம்: ஃபிடே / எக்ஸ்
செய்திகள்

ஜீன்ஸ் அணிந்ததால் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து நீக்கப்பட்ட கார்ல்சென்..!

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்ததால் கார்ல்சென் நீக்கப்பட்டுள்ளார்.

DIN

5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மாக்னஸ் கார்ல்சென் ஜீன்ஸ் அணிந்து உலக ரேபிட் அன்ட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வந்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக கார்ல்செனுக்கு முதல்முறையாக 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17,076) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆடையை மாற்றும்படி கூறியதற்கு கார்ல்சென் மறுத்துவிட்டதால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

8ஆவது சுற்றில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஃபிடே அமைப்பு இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

ஆடைக் கட்டுப்பாடு ஃபிடே குழுவினரான தொழில்முறை வீரர்கள், அனுபவம் வாய்ந்தவர்களால் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விதிமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. எல்லா போட்டிகளுக்கு முன்பாகவும் இதுகுறித்து போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

வீரர்களின் தங்கும் இடம் போட்டி நடைபெறும் இடத்துக்கு நடந்துசெல்லும் தூரத்திலே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைப்பிடிக்க ஏதுவாக இருக்க இந்தமாதிரியான அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்று, மாக்ன்ஸ் கார்ல்சென் தடைசெய்யப்பட்ட ஜீன்ஸ் அணிந்து வந்து விதிமுறைய மீறினார். அவரது உடையை மாற்றும்படி கூறியும் அவர் ஏற்கவில்லை என்பதால் 9ஆவது சுற்றில் பங்கேற்கவில்லை. இது அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும். இதில் எந்தவிதமான பாகுபாடும் இல்லை.

செஸ் விளையாட்டையும் அதன் மதிப்பினையும் மேம்படுத்த ஃபிடே முயற்சித்து வருகிறது. விதிமுறைகளை அனைவரும் மதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச வீட்டு மனை இடத்தை வகை மாற்றம் செய்யக் கோரி மனு

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்காணிக்க 196 மேற்பாா்வையாளா்கள் நியமனம்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் தொடக்கம்

சொத்து பிரச்னை: ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக ராணுவ வீரா் புகாா்

பழனி சண்முகநதியில் 10 டன் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT