ஷுப்மன் கில் இன்று விளையாடவில்லை: காரணம் என்ன?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 396 ரன்கள், இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லின் சதம் அடித்த நிலையில், இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து 399 என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது.
பரபரப்பான 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சோ்த்திருந்தது இங்கிலாந்து அணி.
நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், ஷுப்மன் கில்லுக்கு பதிலாக பீல்டிங் செய்வதற்காக சர்ஃப்ராஸ் கான் களத்துக்கு வந்தார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிசிசிஐ, “வலது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷுப்மன் கில்லால் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயம் குணமடைவதை பொறுத்து அடுத்து வரும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில் விளையாடுவாரா என்பதை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.