செய்திகள்

ஐசிசி தரவரிசையில் வரலாறு படைத்த பும்ரா! 

DIN

ஐசிசி டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம் பெற்று வரலாறு படைத்தாா். இதன் மூலம் இந்த சிறப்பைப் பெற்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளா் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளாா்.

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் பும்ரா அபாரமாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் முதலிடத்தைப் பெற்றாா்.

பேட்கம்மின்ஸ், ககிஸோ ரபாடா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி பௌலா்களில் முதலிடம் பெற்றுள்ளாா். 34 டெஸ்ட் ஆட்டங்களில் 10 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா இதற்கு முன்பு அதிகபட்சமாக தரவரிசையில் 3-ஆவது இடம் பெற்றிருந்தாா்.

நிகழாண்டு கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6/61, விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 6/45 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாா் பும்ரா.

மேலும் இதன் மூலம் 150 டெஸ்ட் விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்திய இந்திய வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா். பும்ரா ஏற்கெனவே ஒருநாள், டி20யிலும் முதலிடம் வகித்திருந்தாா். அஸ்வின் முதலிடத்தில் இருந்த நிலையில், ரபாடாவுக்கு பின் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

881 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்திலும், 904 புள்ளிகளுடன் அஸ்வினும், 899 புள்ளிகளுடன் ஜடேஜாவும் ஐசிசி தரவரிசையில் சிறப்பிடங்களைப் பெற்றனா்.

பேட்டிங் தரவரிசை:

பேட்டிங் தரவரிசையில் இடதுகை பேட்டா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 இடங்கள் முன்னேறி 29-ஆவது இடத்தில் உள்ளாா். ஷுப்மன் கில் 14 இடங்கள் முன்னேறி 29-ஆவது இடத்தில் உள்ளாா். இங்கிலாந்து பேட்டா் ஸாக் கிராலி 8 இடங்கள் முன்னேறி 22-ஆவது இடத்தில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT