செய்திகள்

ரஞ்சிக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை!

ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

DIN

முதன் இன்னிங்ஸ் ரன்கள் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் மும்பை மற்றும் பரோடா அணிகள் விளையாடி வந்த நிலையில், போட்டி இன்று முடிவுக்கு வந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. இருப்பினும், முதல் இன்னிங்ஸ் ரன்கள் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் விதர்பா அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் தற்போது ரன்கள் முன்னிலை அடிப்படையில் மும்பை அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மும்பை அணி இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் மோதுகின்றன.

காலிறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை மற்றும் பரோடா அணிகள் முறையே 384 ரன்கள் மற்றும் 348 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT