முகப்பு
செய்திகள்

ரஞ்சிக் கோப்பை: கர்நாடகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய விதர்பா!

கர்நாடகத்தை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 11:03 AM
பகிர்:

கர்நாடகத்தை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

விதர்பா மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிப் போட்டி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று போட்டி நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் விதர்பா அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கர்நாடகத்தை வெளியேற்றியது.

371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடகம் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்து. இதன் மூலம் கர்நாடகம் 128 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. விதர்பா தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் ஹார்ஷ் துபே மற்றும் ஆதித்யா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஏற்கனவே மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், தற்போது விதர்பாவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.