படம் | ட்விட்டர் (எக்ஸ்) 
செய்திகள்

3-வது ஒருநாள்: இந்திய மகளிரணிக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

இந்திய மகளிரணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களைக் குவித்துள்ளது. 

DIN

இந்திய மகளிரணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களைக் குவித்துள்ளது. 

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இன்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபோபி லிட்ச்ஃபீல்ட் 119 ரன்களும் (16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்), கேப்டன் ஹேலி 82 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஸ்ரேயங்கா பட்டீல் 3 விக்கெட்டுகளையும், அமன்ஜோட் கௌர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. தொடரை இழந்தபோதிலும் இந்திய அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT