செய்திகள்

ஓய்வு பெறுவதற்கு முன்பா வார்னருக்கு இப்படி நடக்க வேண்டும்!

DIN

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள டேவிட் வார்னர் அவரது மதிப்பு மிக்க பச்சை நிறத் தொப்பியை யாரோ எடுத்துவிட்டதாகவும், அதனை தயவு செய்து திருப்பியளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

பாகிஸ்தானுடனான 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே தனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் அறிவித்திருந்தார். அதன்படி, பாகிஸ்தானுக்கு எதிராக நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெறுகிறார். 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது.  மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று வார்னருக்கு பிரியாவிடை கொடுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள டேவிட் வார்னர் அவரது மதிப்பு மிக்க பச்சை நிறத் தொப்பியை யாரோ எடுத்துவிட்டதாகவும், அதனை தயவு செய்து திருப்பியளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பதில் தெரிவித்திருப்பதாவது: நாளை நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியே எனது கடைசி டெஸ்ட் போட்டி. நான் எனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன். யாரோ எனது பையிலிருந்து எனது மதிப்புமிக்க பச்சைநிற தொப்பியை எடுத்துவிட்டார்கள். எனது பொருள்கள் அடங்கிய பை மெல்போர்னுக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து சில நாள்களுக்கு முன்பு சிட்னிக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனது பையை அனுப்பிய நிறுவனத்திடம் நான் விசாரித்துவிட்டேன்.

கேமராவை பரிசோதித்த அவர்கள் யாரும் நாங்கள் அனுப்பிய பார்சலைத் திறக்கவில்லை என தெரிவித்து விட்டனர். யாரேனும் தவறுதலாக எனது பையை எடுத்திருந்தால், என்னிடம் கொடுத்துவிடுங்கள். அதில் எனது ராசியான பச்சை நிறத் தொப்பி இருந்தது. அதனை எனது கடைசிப் போட்டியில் அணிந்து விளையாடுவதற்காக வைத்திருந்தேன். எனது பை யாரிடம் இருந்தாலும் அதனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னிடம் கொடுத்துவிட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் அந்த பச்சை நிறத் தொப்பியை அணிந்து விளையாடுவதை மிகுந்த கௌவரவமாக கருதுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT