செய்திகள்

தலைமைப்பண்பு குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த தென்னாப்பிரிக்க டி20 லீக்: மார்கரம்

DIN

தென்னாப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியின் அய்டன் மார்கரம் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்க டி20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை மார்கம் கேப்டனாக வழிநடத்துகிறார். அவரது தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் அறிமுக சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்த நிலையில்,  தென்னாப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியின் அய்டன் மார்கரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரன்கள் குவிப்பது என்பது எப்போதும் சிறப்பானது. டி20 லீக் என்பது கண்டிப்பாக வித்தியாசமானது. உங்களுக்கு டி20 போட்டிகள் நம்பிக்கையை அளிக்கும். அணியை கேப்டனாக வழிநடத்துவது என்பது மிகவும் பெருமையான விஷயம். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக அணியை வழிநத்துவது எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரம். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக நான் தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார். 

நாளை (ஜனவரி 10)  முதல் தென்னாப்பிரிக்க டி20 லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT