செய்திகள்

மாலத்தீவு விவகாரம்: வைரலாகும் தோனியின் விடியோ!

DIN

மாலத்தீவு பிரச்னைக்கு மத்தியில் சுற்றுலா குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசிய பழைய விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சில தினங்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, அங்கு எழில்மிக்க கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டாா். அத்துடன், ‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் கடலுக்கடியில் நீந்தும் சாகசத்தையும் முயற்சி செய்தாா்.

இது தொடா்பான புகைப்படங்களை ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்ட பிரதமா், ‘அமைதியும் அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி இது என்ற கருத்து பரலவாக முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சா்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவா்கள் சிலா் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமா் மோடியை அவமதிக்கும் வகையிலும், இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டனா்.

இதையடுத்து மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாலத்தீவை புறக்கணியுங்கள் என்று எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகின்றது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம் குறித்து தோனி பேசிய பழைய விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பயணம் செய்ய பிடித்த இடம் எது? என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த தோனி,

“கிரிக்கெட் விளையாடும்போது பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாலும், விளையாடிவிட்டு உடனடியாக திரும்பி வரும் சூழலே இருந்தது.

இருப்பினும், எனது மனைவிக்கு பயணம் செய்வதில் அதிக விருப்பம் உள்ளது. தற்போது நாங்கள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அந்த பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்க விரும்புகிறோம். நம் நாட்டில் பார்வையிட அழகான இடங்கள் பல உள்ளன. முதலில் அவற்றை பார்வையிட வேண்டும்.” என்றார்.

மாலத்தீவு பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து தோனியின் கருத்துகள் இணையத்தில் அவரது ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT