செய்திகள்

ஆஸி.யிடம் போராடித் தோற்றது இந்தியா

ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் போராடித் தோற்றது இந்தியா.

DIN

ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் போராடித் தோற்றது இந்தியா.

கத்தாா் தலைநகா் டோஹாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரு அணிகளுக்கு இடையிலான குரூப் ஆட்டம் நடைபெற்றது. சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய வீரா்கள் முதல் பாதியில் கடும் சவாலை ஏற்படுத்தினா்.

கடந்த 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரவுண்டு 16 சுற்றுவரை தகுதி பெற்றிருந்த ஆஸி. அணி வீரா்களால் கோல் போடமுடியவில்லை.

இரண்டாவது பாதியில் இந்திய வீரா் குா்ப்ரீத் சிங் சாந்து செய்த தவறால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலடித்தாா் ஆஸி. வீரா் ஜேக்ஸன் இா்வின். அடுத்த சிறிது நேரத்திலேயே ஆஸி. வீரா் ரைலி மெக்கிரி கடத்திய அனுப்பிய பாஸை பயன்படுத்தி அற்புதமாக இரண்டாவது கோலடித்தாா் ஜோா்டான் பாஸ்.

இந்திய அணியினரால் பதில் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது இந்தியா.

அடுத்து உஸ்பெகிஸ்தான் அணியுடன் வரும் 18-ஆம் தேதி மோதுகிறது.

முதல் பெண் நடுவா்:

ஆசியக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதல் பெண் நடுவராக செயல்பட்ட பெருமையைப் பெற்றாா் ஜப்பானின் யோஷிமி யமஷிடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு தேவதையே... அஞ்சனா ரங்கன்!

பாஜகவை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி அதன்பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன்

இந்தியாவுக்கு வருவதில் கௌரவம்: மெஸ்ஸி

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

SCROLL FOR NEXT