2014 ஜப்பான் - பாலஸ்தீன போட்டியின் போது | AP 
செய்திகள்

போருக்கு மத்தியில் கால்பந்தாட்டம்: பாலஸ்தீன அணியின் பங்கேற்பு

உள்நாட்டில் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான சூழல் இல்லாததால் விளையாடுவதற்கு குறைவான வாய்ப்புகளே பாலஸ்தீன அணிக்குக் கிடைத்துள்ளது.

DIN

ஆசிய கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பாலஸ்தீன அணி தொடரின் முதல் ஆட்டத்தில் ஈரானை எதிர்கொள்ளவுள்ளது.

கத்தார் தலைநகர் டோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை போட்டியில், மூன்று முறை சேம்பியனான ஈரானுடன் பாலஸ்தீன அணி மோதும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

உள்நாட்டில் கால்பந்தாட்டப் போட்டிகள் இல்லாததால் விளையாடுவதற்கு குறைவான வாய்ப்புகளே உடைய பாலஸ்தீன அணி, இஸ்ரேல்- ஹமாஸ் போர் நடைபெறும் 100-வது நாளில் விளையாடவுள்ளது.

பாலஸ்தீன அணியின் கேப்டன் முசாப் பட்டாத், “போர் ஆரம்பித்ததால் இந்த 3 மாதங்களில் மிகக் குறைவாகவே விளையாட்டில் செயல்பட முடிந்தது. போர் எதிர்மறையாக பாதித்துள்ளது. வெளிநாட்டிலும் தகுதிச் சுற்றுகளிலும் நட்பு ஆட்டங்களை விளையாடினோம்” எனத் தெரிவித்தார்.

முந்தைய பயிற்சி ஆட்டத்தின்போது பாலஸ்தீனம், உஸ்பெகிஸ்தானிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியுற்றது. சவுதி அரேபியா உடன் 0-0 என்ற கணக்கில் சமன் செய்தது.

போட்டியில் வெற்றி தோல்விகளைத் தாண்டி, இந்தப் போட்டியில் பாலஸ்தீனத்தின் பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்! என்னென்ன துறைகள் இயங்கும்?

மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!

யு-19 பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி.யை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

நமது கருத்து மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது: மோகன் பாகவத்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு! எங்கே? எப்படி?

SCROLL FOR NEXT