செய்திகள்

இங்கிலாந்து பேட்ஸ்மேனுக்கு இடையூறு செய்த பும்ரா; கண்டித்த ஐசிசி!

ஐசிசி விதியை மீறிய இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ஐசிசி கண்டித்துள்ளது.

DIN

ஐசிசி விதியை மீறிய இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ஐசிசி கண்டித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியின்போது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி விதிமுறையை மீறியதற்காக ஐசிசி கண்டித்துள்ளது. மேலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள மெரிட் புள்ளிகளில் ஒன்றையும் ஐசிசி குறைத்துள்ளது.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி விதிமுறையை மீறியுள்ளார். ஐசிசியின் விதிமுறையை மீறியதற்காக பும்ராவை கண்டிப்பதுடன் அவருக்கு மெரிட் புள்ளி ஒன்றும் குறைக்கப்படுகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 81-வது ஓவரில் இங்கிலாந்து அணியின் ஆலி போப் ரன் எடுக்க ஓடுகையில் பும்ரா வேண்டுமென்ற அவருக்கு இடைஞ்சல் செய்யும் விதமாக அவர் முன் வந்தார். ஐசிசியின் விதி 2.12-ஐ பும்ரா மீறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் இந்த நடவடிக்கையை பும்ரா ஏற்றுக் கொண்டதால் அவர் இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கடந்த 2 ஆண்டுகளில் பும்ரா முதல் முறையாக ஐசிசி விதிகளை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! மூவருக்கு பகிர்ந்தளிப்பு

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்: இளவரசு

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் தொடக்கம்!

பூவிழி மலரோ... ஸ்ரீமுகி

SCROLL FOR NEXT