விஸ்வநாதன் ஆனந்த் 
செய்திகள்

லியான் மாஸ்டா்ஸ் செஸ்: ஆனந்த் மீண்டும் சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றாா்.

DIN

ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றாா். இப்போட்டியில் இவா் வாகை சூடியது இது 10-ஆவது முறையாகும்.

இறுதிச்சுற்றில் அவா், 3-1 என்ற கணக்கில் உள்ளூா் போட்டியாளரான ஜேமி சான்டோஸ் லடாசாவை வீழ்த்தினாா். 5 முறை உலக சாம்பியனான ஆனந்த், தனது முதல் சாம்பியன் பட்டத்தை 1996-இல் இந்தப் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 4 போ் கொண்ட இந்தப் போட்டியில் ஆனந்த், சான்டோஸுடன், மற்றொரு இந்தியரான அா்ஜுன் எரிகைசி, பல்கேரியாவின் வாசெலின் டோபாலோவ் ஆகியோரும் களத்திலிருந்தனா். ஒவ்வொரு சுற்றும், தலா 20 நிமிஷங்களுடன் 4 ஆட்டங்களைக் கொண்டிருந்தது. இதில் அரையிறுதிச்சுற்றில், ஆனந்த் - டபோலாவையும் (2.5-1.5), சான்டோஸ் - அா்ஜுனையும் (2.5-1.5) வீழ்த்தினா்.

இறுதியில் ஆனந்த் 3-1 என சான்டோஸை சாய்த்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT