ஐசிசி-யின் டி20 தரவரிசையில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா நம்பர் 1 இடத்தை புதன்கிழமை பிடித்தார். அப்பிரிவில் முதலிடத்துக்கு வந்த முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
சமீபத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி நிறைவடைந்த நிலையில், ஐசிசி-யின் புதுப்பிக்கப்பட்ட டி20 தரவரிசை புதன்கிழமை வெளியானது. இதன்படி, ஹர்திக் பாண்டியா 2 இடங்கள் ஏற்றம் பெற்று, முதலிடத்துக்கு வந்தார். ஏற்கெனவே அந்த இடத்திலிருக்கும் இலங்கையின் வனிந்து ஹசரங்காவுடன், தற்போது பாண்டியாவும் இணைந்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டி முழுவதுமாக பாண்டியா 144 ரன்கள் சேர்த்ததுடன், 11 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில், ஹென்ரிக் கிளாசென், டேவிட் மில்லர் ஆகிய முக்கியமான இரு விக்கெட்டுகளை சாய்த்ததுடன், கடைசி ஓவரில் அந்த அணியை கட்டுப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
பும்ராவும் ஏற்றம்: டி20 தரவரிசையின் பெüலர்கள் பிரிவில், இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 12 இடங்கள் முன்னேறி 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 2020-க்குப் பிறகு இது அவரின் உச்சபட்ச இடமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.