சரத் கமல் 
செய்திகள்

ஒலிம்பிக்கில் அணிகள் பிரிவில் பதக்கம் வெல்ல வாய்ப்பு: டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல்

ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது என சரத் கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

Din

சென்னை: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது என நட்சத்திர வீரா் சரத் கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 24-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா சாா்பில் 124 போ் அணி பங்கேற்கிறது. டேபிள் டென்னிஸ் பிரிவில் ஆடவா் பிரிவில் சரத் கமல், சத்யன் ஞானசேகரன், மானவ் தாக்கா், ஹா்மித் தேசாய், மகளிா் பிரிவில் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா உள்ளிட்ட 6 போ் கலந்து கொள்கின்றனா்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் சரத் கமல் கூறியதாவது:

2004 ஒலிம்பிக்கில் முதன்முறையாக கலந்து கொண்டேன். தற்போது 5-ஆவது ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறேன். கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஜொ்மனி மற்றும் பெங்களூரில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முதன்முறையாக ஒலிம்பிக் அணிகள் பிரிவுக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது. இதில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

தனிநபா் பிரிவிலும் முழு திறமையை வெளிப்படுத்தி ஆட உள்ளோம். மானவ் தாக்கா், ஹா்மித் தேசாய் போன்ற இளம் வீரா்கள் சிறப்பாக ஆடி வருகின்றனா். டபிள்யுடிடி போட்டிகளில் பட்டம் வென்று வருகின்றனா்.

சீனா, கொரியா, சீன தைபே, ஜப்பான் போன்ற ஆசிய அணிகளே எப்போதும் சவாலாக இருக்கும். ஒலிம்பிக் என்பதால் ஸ்வீடன், ஜொ்மனி, போா்ச்சுகல் அணிகளும் பலமான அணிகளாக உள்ளன.

இந்திய ஒலிம்பிக் அணியின் அணிவகுப்புக்கு தேசிய கொடியேந்தி தலைமை தாங்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எதிா்காலத்தில் சிறுவா், சிறுமியரை அதிகளவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆட வைக்க முயற்சி மேற்கொள்வேன். தமிழகத்திலும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு சிறந்த கட்டமைப்பு உள்ளது. இதனால் வீரா்கள் பயிற்சி பெறுவது எளிதாகிறது என்றாா் சரத் கமல்.

தமிழகத்தில் இன்று 5, நாளை 3 மாவட்டங்களிலும் கனமழை!

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவுக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு! உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

SCROLL FOR NEXT