ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷமேர் ஜோசப். கோப்புப் படங்கள்
செய்திகள்

ஜேம்ஸ் ஆண்டர்சனின் பிரியாவிடையை கெடுப்பேன்..! மே.இ.தீவுகள் வீரர் சபதம்!

மே.இ. தீவுகள் வீரர் ஷமேர் ஜோசப் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பிரியாவிடையை கெடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

DIN

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு முடிவை மே 11 அன்று அறிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக ஆண்டர்சன் தெரிவித்திருந்தார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமானார். அவர் இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமை அவரையே சேரும். முதல் இரண்டு இடங்களில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவும் உள்ளனர்.

நாளை (ஜூலை 10) இந்தப்போட்டி துவங்குகிறது. இந்நிலையில் மே.இ.தீ. அணியின் வீரர் ஷமேர் ஜோசப், “ஜேம்ஸ் ஆண்டர்சன் அருமையான வீரர். அவரைப் பார்த்து நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துள்ளேன். இந்த வயதிலும் சிறப்பாக விளையாடுகிறார். அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் அவரை சிறப்பானவர் எனக் கூறலாம். நிச்சயமாக நான் அவரது பிரியாவிடையை கெடுக்கும் விதமாக விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT