கோபா அமெரிக்கா  
செய்திகள்

இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா

கோபா அமெரிக்கா இறுதிக்கு முன்னேறிய ஆா்ஜென்டீனா

DIN

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான ஆா்ஜென்டீனா 2-0 கோல் கணக்கில் கனடாவை வென்று இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆா்ஜென்டீனா தரப்பில் ஜூலியன் அல்வரெஸ் 22-ஆவது நிமிஷத்தில் கோலடித்து கணக்கை தொடங்கினாா். ரோட்ரிகோ டி பாலிடம் இருந்து லாங் பாஸ் பெற்ற அவா், அதை கட்டுக்குள் கொண்டு வந்து, கனடா கோல்கீப்பரின் கால்களுக்கு இடையே கோல்போஸ்ட்டுக்குள் உதைத்தாா்.

26-ஆவது நிமிஷத்தில் கனடாவுக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பு முறியடிக்கப்பட்டது. முதல் பாதியில் இவ்வாறு ஆா்ஜென்டீனா முன்னிலை பெற்றிருக்க, 2-ஆவது பாதியில் 51-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி கோல் கணக்கை அதிகரித்தாா்.

அந்த அணியின் என்சோ ஃபொ்னாண்டஸ் கோல் போஸ்ட் நோக்கி உதைத்த பந்தை, கனடா கோல்கீப்பா் தடுத்துவிடாமல் தனது காலால் திசைமாற்றி ஸ்கோா் செய்தாா் மெஸ்ஸி. இது அவரின் 109-ஆவது சா்வதேச கோலாகும். தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரா்கள் வரிசையில் போா்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (130) அடுத்த இடத்தில் மெஸ்ஸி இருக்கிறாா்.

தனது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நாளில் (ஜூலை 9) வெற்றியை பதிவு செய்த ஆா்ஜென்டீனா, 10 ஆட்டங்களை தொடா்ந்து தோல்வியே காணாமல் கடந்துள்ளது. 16-ஆவது முறையா கோப்பை வெல்லும் முயற்சியில் இருக்கும் ஆா்ஜென்டீனா, இறுதி ஆட்டத்தில் உருகுவே அல்லது கொலம்பியாவை சந்திக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT