ஒருநாள் போட்டிகளில் 3500 ரன்களைக் கடந்து இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க மகளிரணி 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3500 ரன்களைக் கடந்த 3-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த வரிசையில், 7805 ரன்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார். இந்திய மகளிரணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கௌரும் ஒருநாள் போட்டிகளில் 3500 ரன்களைக் கடந்துள்ளார்.
இன்றையப் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.