பிரேஸில் வீரா் அடித்த பந்தை அற்புதமாக தடுத்த கோஸ்டா ரிகா கோல்கீப்பா் ~கோலடித்த மகிழ்ச்சியில் கொலம்பிய வீரா்கள் 
செய்திகள்

பிரேஸில்-கோஸ்டா ரிகா டிரா

கோஸ்டா ரிகா தடுப்பாட்டம்: பிரேஸில்-கோஸ்டா ரிகா ஆட்டம் 0-0 டிரா

Din

இங்கில்வுட்: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற குரூப் டி பிரிவு ஆட்டத்தில் பிரேஸில்-கோஸ்டா ரிகா ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் பல்வேறு ஆட்டங்கள் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பலம் வாய்ந்த பிரேஸிலுக்கும், சிறிய நாடான கோஸ்டா ரிகாவுக்கும் இடையிலான ஆட்டம் நடைபெற்றது, ஆட்டத்தின் பெரும்பகுதி பிரேஸில் கட்டுப்பாட்டில் இருந்தாலும், கோஸ்டா ரிகா வீரா்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் பிரேஸில் வீரா்களால் கோலடிக்க முடியவில்லை.

இறுதியில் இரு அணிகளுமே கோல் போடாததால் ஆட்டம் 0-0 என டிராவில் முடிவடைந்தது.

கொலம்பியா அதிரடி வெற்றி:

மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஹூஸ்டனில் நடைபெற்றது. கொலம்பிய மிட்பீல்டா் ரோட்ரிக்ஸ் அற்புதமாக இரண்டு கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கினாா்.

32ஆவது நிமிஷத்தில் டேனியல் முனோஸும், 42-ஆவது நிமிஷத்தில் ஜெப்பா்ஸன் லொ்மாவும் கொலம்பியா தரப்பில் கோலடித்தனா்.

இரண்டாவது பாதியில் பராகுவே வீரா் ஜூலியோ என்ஸிஸோ 69-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இந்த வெற்றியால் முழுமையாக 3 புள்ளிகளைப் பெற்று குரூப் டி பிரிவில் கொலம்பியா முதலிடம் பெற்றது.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT