ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி ஜப்பான் மகளிரணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி வீராங்கனைகள் 13 பெனால்டி கார்னர்கள் வாய்ப்புகளில் 48-வது நிமிடத்திலும், 56-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
லீக் சுற்றில் தோற்கடித்த சீனாவை இந்திய அணி நாளை(நவம்பர்.20) இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. முன்னதாக, முதல் அரையிறுதியில் சீனா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
3-வது, 4-வது இடத்திற்கான போட்டியில் மலேசியா ஜப்பானை எதிர்கொள்கிறது. ஐந்தாவது-ஆறாவது இடத்திற்கான ஆட்டத்தில் கொரியா 3-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.