டிங் லிரென், டிங் லிரென்.  படங்கள்: எக்ஸ் / ஃபிடே
செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: சமனில் முடிந்த 2ஆவது சுற்று..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் போட்டி சமனில் முடிவடைந்தது.

DIN

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் போட்டி சமனில் முடிவடைந்தது.

நடப்பு சாம்பியன் என்ற முறையில் லிரென் இந்தப் போட்டிக்கு நேரடியாகத் தோ்வாகினாா். நடப்பாண்டில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றத மூலம், குகேஷ் உலக சாம்பியன்ஷிப்புக்கு தோ்வாகி, லிரெனுடன் மோதும் வாய்ப்பை பெற்றாா்.

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி, நவம்பா் 25 முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரை 14 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. இதில் முதல் சுற்றில் வென்ற டிங் லிரென் முன்னிலையில் இருக்கிறார்.

இரண்டாவது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதன்மூலம் 1.5-0.5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் டிங் லிரென் முன்னிலையில் இருக்கிறார்.

முதலில் யார் 7.5 புள்ளிகள் எடுப்பவர் வெற்றியாளாராக அறிவிக்கப்படுவர்.

2ஆவது சுற்றில் லிரென் வெள்ளை நிற காய்களுடனும் குகேஷ் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். இருவரும் 23 நகர்த்தல்களுக்குப் பிறகு டிராவை ஏற்றுக்கொண்டார்கள்.

3ஆவது சுற்று நாளை நடைபெறுகிறது. இதில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT