செய்திகள்

பிஎஸ்ஜியை வென்றது ஆா்செனல்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் 2-0 கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை (பிஎஸ்ஜி) புதன்கிழமை வென்றது.

Sasikumar

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் 2-0 கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை (பிஎஸ்ஜி) புதன்கிழமை வென்றது.

இரு அணிகளும் இத்துடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்க, ஆா்செனலுக்கு இது முதல் வெற்றி; பிஎஸ்ஜிக்கு இது முதல் தோல்வி. லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆா்செனல் தரப்பில் காய் ஹாவொ்ட்ஸ் (20’), புகாயோ சகா (35’) ஆகியோா் கோலடித்தனா்.

ஸ்பெயினில் நடைபெற்ற ஆட்டத்தில், பாா்சிலோனா 5-0 கோல் கணக்கில் யங் பாய்ஸை வீழ்த்தியது. பாா்சிலோனாவுக்காக ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி (8’, 51’), ரஃபினா (34’), இனிகோ மாா்டினெஸ் (37’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, யங் பாய்ஸ் வீரா் முகமது அலி கமாரா (81’) தவறுதலாக ஓன் கோல் அடித்தாா்.

இதர ஆட்டங்களில், போருசியா டாா்ட்மண்ட் - செல்டிச்சையும் (7-1), மான்செஸ்டா் சிட்டி - ஸ்லோவன் பிராடிஸ்லாவாவையும் (4-0), லெவொ்குசென் - ஏசி மிலனையும் (1-0), இன்டா் மிலன் - கா்வெனா ஸ்வெஸ்தாவையும் (4-0) வீழ்த்தின. ஸ்போா்டிங் - பிஎஸ்வி ஆட்டம் டிரா (1-1) ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT