மான்செஸ்டர் சிட்டி அணியின் மிட் ஃபீல்டர் ரோட்ரி இந்தாண்டுக்கான பேலன் தோர் விருதினை (தங்கப் பந்து) வென்றார்.
கால்பந்து உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக இந்த விருது கருதப்படுகிறது. இந்தமுறை ரியல் மாட்ரிட் அணியின் ஃபார்வேட் வீரர் வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்குமென பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் கடைசியில் அவருக்கு இல்லையென தகவல் வெளியானது.
அதனால் இந்த விருது விழாவினை ரியல் மாட்ரிட் அணியினர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
ரியல் மாட்ரிட் அணியில் வினிசியஸ் உடன் பலரும் தேர்வுப் பட்டியலில் இருந்தார்கள்.
2023-24 சீசனில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு உலகின் சிறந்த வீரராக பேலன் தோர் விருதினை பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
நிற வெறியினால் வினிசியஸுக்கு விருது தரவில்லை எனக் கூறப்படுகிறது. வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்காதது கால் பந்து உலகில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், வினிசியஸ் முதல்முறையாக மௌனம் கலைத்தார். தனது எக்ஸ் பக்கத்தில், “தேவைப்பட்டால் நான் இதைவிட 10 மடங்கு அதிகமாக உழைக்கவும் தயார். ஆனால், அவர்கள் இன்னும் தயாராகவில்லை” எனக் கூறியுள்ளார்.
நிறப் பாகுபாட்டினை காரணம் காட்டி பேசியுள்ளதாகவே ரியல் மாட்ரிட் அணி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.