சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் (தங்கப் பந்து) (Ballon d'Or) விருதை ஸ்பெயினின் கால்பந்து வீரர் ரோட்ரி வென்றார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் பேலன் தோர் விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார்.
கடந்தமுறை மெஸ்ஸி 8ஆவது முறையாக பேலன் தோர் (தங்கப் பந்து) விருதை வென்றிருந்தார். இந்தாண்டு மெஸ்ஸி, ரொனால்டோ இருவருமே பட்டியலில் தேர்வாகாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
68ஆவது பேலன் தோர் (தங்கப் பந்து) விருதினை 28 வயதாகும் ரோட்ரி வென்றார்.
மான்செஸ்டர் சிட்டி அணிக்காக மிட் ஃபீல்டராக சிறப்பாக விளையாடி பிரீமியர் லீக்கினை வெல்லவும் ஸ்பெயினின் யூரோப்பியன் சாம்பியன்ஷிப்பை வெல்லவும் உதவினார்.
மகளிர் பிரிவில் 26 வயதாகும் ஸ்பானிஷின் பொன்மாட்டி இந்த விருதினை தக்கவைத்தார்.
விழாவை புறக்கணித்த ரியல் மாட்ரிட் அணி
இறுதிப் பட்டியலில் ரியல் மாட்ரிட் அணியின் வினிசியஸ் ஜுனியர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இவருக்குதான் பேலன் தோர் விருது கிடைக்குமென எதிஎபார்த்திருந்த நிலையில் அவருக்கு கிடைக்காதென தகவல் வந்ததால் ரியல் மாட்ரிட் அணி இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற விருதுகள்
சிறந்த ஆடவர் அணி- ரியல் மாட்ரிட் அணி
கோபா விருது - லாமின் யமால்
கெர்ட் முல்லர் - கிளியன் எம்பாபே, பெய்ர்ன் முனிச்
சிறந்த பயிற்சியாளர் (ஜோகன் க்ரூஃபி டிராபி) - ரியல் மாட்ரிட் அணி கார்லோ அன்செலோட்டி
லெவ் யாஷின் - ஆர்ஜெண்டினாவின் பிரபல கோல் கீப்பர் எமிலியானோ மார்டினிஸ் வென்றார்.
சிறந்த மகளிர் அணி - பார்சிலோனா மகளிரணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.